ஏ.செட்டியார்பட்டியில் நாகம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு அழகர் கோயிலில் உள்ள நுாபுர கங்கையில் பக்தர்கள் தீ்ர்த்தமாடினர். அதனைத் தொடர்ந்து மந்தையில் இருந்து பால்குடம் எடுத்த பக்தர்கள் பிள்ளையார் கோயில் வழியாக நாகம்மாள் கோயிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிேஷகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று(மே 28) மந்தையில் இருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக புளிக்கண்மாயில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு கிடா வெட்டி பொங்கல் வைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் செட்டியார்பட்டி, கிடாரி்ப்பட்டி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.