பதிவு செய்த நாள்
30
மே
2022
11:05
கூடுவாஞ்சேரி : கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நேற்று நடந்தன.நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பல விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன.பின், சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் அருள்பாலித்தார். கிருத்திகையை முன்னிட்டு, மாமர சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.அதேபோன்று, நந்திவரம் -கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், குமரன் நகர், சீனிவாசபுரம், டிபன்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அச்சிறுப்பாக்கம் : அச்சிறுப்பாக்கம் அருகே, முருங்கை ஊராட்சியில், முருகன் கோவிலில், 30ம் ஆண்டு திருவிழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, நேற்று காலை, சிறப்பு பூஜையுடன், 11:00 மணிக்கு முருகன் கோவிலில் இருந்து காவடி ஊர்வலம் துவங்கி, கிராமத்தின் தெருக்கள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.பக்தர்கள் பறவை காவடி பூட்டி; வேல் குத்தி, பால்குடம் மற்றும் சடல் அணிந்து அலங்கரிக்கப்பட்ட முருகன் சிலையை, டிராக்டர் வாகனத்தில் அமர்த்தி தேர் இழுத்து சென்றனர். நேற்று காலை 12:00 மணிக்கு திருதேர் ஊர்வலம் நடைபெற்றது.