சோமனூர்: கருமத்தம்பட்டி, சூலூர் சுற்றுவட்டார கோவில்களில் அமாவாசையை ஒட்டி, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சூலூரில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில், காட்டூர் மாகாளியம்மன் கோவில், அத்தனூர் அம்மன் கோவில்களில் அமாவாசையை ஒட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில், சோமனூர், சுப்பராயன் புதூர், வாகராயம்பாளையம், செல்லப்பம் பாளையத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அமாவாசை அலங்கார பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.