வி.கே.புரம் வைத்திலிங்கபுரம் மாரியம்மன் கோயில் கொடை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2012 12:08
திருநெல்வேலி : வி.கே.புரம் வைத்திலிங்கபுரம் மாரியம்மன் கோயில் கொடை விழா இன்று (4ம் தேதி) துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது. வி.கே.புரம் வைத்திலிங்கபுரம் வடக்குத்தெரு மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 29ம் தேதி காலை 7 மணிக்கு கால்நாட்டு வைபவம் நடந்தது. இன்று (4ம் தேதி) அதிகாலை கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு பூந்தட்டு ஊர்வலம், பாபநாசத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் தேதி காலை 10 மணிக்கு பாபநாசத்தில் இருந்து பால்குடம், தீர்த்தம் ஊர்வலம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு 7 மணிக்கு அம்மன் அலங்காரம், மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடக்கிறது. 6ம் தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மதியம் 12 மணிக்கு இளைஞர் அணி சார்பில் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை வைத்திலிங்கபுரம் மாரியம்மன் கோயில் கொடை விழா கமிட்டியினர், இளைஞர் அணியினர் மற்றும் ஆலோசகர்கள் செய்துள்ளனர்.