பதிவு செய்த நாள்
02
ஜூன்
2022
06:06
தங்கவயல், :தங்கவயல் உரிகம் வட்டம் ஈ.டி.பிளாக் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது.நேற்று மாலை கணபதி பூஜை, புண்ணியாகம் வாஸ்து பூஜை, அங்குரார்ப்பனம், ரக் ஷா பந்தனம், ஜலாதி வாசம் நடந்தது. இன்று காலையில் புண்ணிய யாகம், வேதிகா அர்ச்சனை, குண்ட சமஸ்காரம், கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி, முத்துமாரி யாகசாலை அர்ச்சனை; மாலையில் புண்ணியாகம், பூஜை உபச்சாரம், அஷ்டபந்தன சமர்ப்பணம் நடக்கிறது.நாளை காலை கோ பூஜை, அம்மன் சிலை கண்திறப்பு, மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதி; பகலில் தீபாராதனை அலங்காரம் தீர்த்த பிரசாத வினியோகம் இடம் பெறுகிறது.அம்மன் உருவ சிலை பிரதிஷ்டை சேவைக்கு மறைந்த கோவில் தர்மகர்த்தா பெருமாள் - அமராவதி அம்மாள் குடும்பத்தினர் பொறுப்பேற்றனர்.விழா ஏற்பாடுகளை வட்டார பஞ்சாயத்து, கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.