பதிவு செய்த நாள்
02
ஜூன்
2022
06:06
கூடலுார் : மேல்கூடலுார், கே.கே., நகர் பால் காட்டேரி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 4:30 மணிக்கு, நடு கூடலுார் சித்தி விநாயகர் கோவில், தர்மசாஸ்தா கோவில், சந்தைக்கடை மாரியம்மன் கோவிலிலிருந்து தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, யாகசாலை பிரவேசம்; 7:00 மணிக்கு முதலாம் கால யாகபூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு, 9:30 மணிக்கு கோபுர கலச ஸ்தாபனம், யந்திர பிரதிஷ்டை, சுவாமி பிரதிஷ்டடை நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று, காலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. காலை, 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. திரமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.