ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர்-சிவகாமியம்பாள் கோயிலில் இன்று (3ம் தேதி) நந்தி களபம் நடக்கிறது.ஆடி மாதம் முக்கிய சிவன் கோயில்களில் நந்தி களபம் நடைபெறுவது வழக்கம். ஆழ்வார்குறிச்சியிலிருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையில் அமைந்துள்ள வன்னியப்பர்-சிவகாமியம்பாள் கோயிலில் இன்று (3ம் தேதி) ஆடி நந்தி களபம் வைபவம் நடக்கிறது.இன்று காலை 10 மணியளவில் நந்திக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணியளவில் சந்தன முழுக்காப்பில் நந்தி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. முன்னதாக கோயிலுள்ள சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ பூஜைகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.