வீரவநல்லூர் : பத்தமடை வில்வநாதசுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை புஷ்பாஞ்சலி திருவிழா வரும் 10ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை யாகசாலை பூஜை, விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. இரவு 7 மணி முதல் மாதர்களின் 447வது திருவிளக்கு வழிபாடும், இரவு 8 மணி முதல் ஆறுமுக அர்ச்சனை, தொடர்ந்து பலவண்ண நறுமண மலர்களால் புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கார்த்திகை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.