வீரவநல்லூர் : வீரவநல்லூர் திரவுபதியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம் நடந்தது. வீரவநல்லூரில் சிறப்பு பெற்ற கோயில்களில் ஒன்றான திரவுபதியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேக அலங்காரம், சிறப்பு தீபாராதனை, வீதியுலா, மகாபாரத உபன்யாசம் நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சியாக திருக்கல்யாணம், அர்ச்சுனர் தபசு காட்சி, அரவான் களபலி நடக்கிறது. விழாவின் சிறப்பு நாளான பூக்குழி இறங்கும் விழா வரும் 10ம் தேதி நடக்கிறது. அன்று காலை பால்குடம் வீதியுலாவும், மதியம் சிறப்பு அபிஷேகமும், பூ வளர்த்தலும், மாலையில் மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் பூக்குழி இறங்குதலும் நடக்கிறது. 11ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 15ம் தேதி பட்டாபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை அக்தார் பாபநாசம் மற்றும் விழாக் கமிட்டியார் செய்து வருகின்றனர்.