அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி யில், வேணுகோபால சுவாமி கோயிலில், வைகாசி வசந்த விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பதினோரு நாட்கள் நடக்கும் விழாவில், சுவாமி தினமும் ஒவ்வொரு விதமான அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆறாம் நாள் விழாவாக திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.