அன்னூர்: கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (10 ம் தேதி) நடக்கிறது. அன்னூர், சிறுமுகை ரோட்டில், கருப்பராயன் கலாமணி நகரில், கன்னிமூல கணபதி, கருப்பராயன், மாசாணி அம்மன், கரியகாளியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில் வளாகத்தில், 21 அடி உயரத்திற்கு காளியம்மன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இத்துடன் மகாமண்டபம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது. காலை 11:00 மணிக்கு லட்சுமி குபேர ஹோமம், கோ பூஜை, நவக்கிரக ஹோமம் நடக்கிறது. மாலையில் முளைப்பாலிகை எடுத்து வருதல் நடக்கிறது. இரவு பாண்டுரங்கன் குழுவின் பஜனை நடக்கிறது. நாளை (10ம் தேதி) அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 6:30 மணிக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. அச்சம் பாளையம் சண்முகத்தின் பஜனை நடைபெறுகிறது. அம்மனின் தசதரிசனம், அபிஷேக பூஜை நடக்கிறது. அருள்வாக்கு சொல்வதில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.