மேலூர்: மேலுார், திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது.
திருமறைநாதர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.மேலுாரை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது. பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. நாளை (ஜூன் 11) தேரோட்டம் நடைபெறுகிறது.