பதிவு செய்த நாள்
11
ஜூன்
2022
01:06
திருப்பரகுன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஜூன் 12) விசாக பால்குட திருவிழா நடக்கிறது. பக்கதர்களின் வசதிக்காக கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் வசதிக்காக கோயிலில் ஒரு வழிப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நுழைவுவாயில் வழியாக சென்று திருவாட்சி, கொடிக்கம்பம் மண்டபம் வழியாக நந்தியை சுற்றி வந்து விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகத்திற்குப் பால் வழங்கி தரிசனம் செய்யவும், மடப்பள்ளி மண்டபம் வழியாக வெளியில் செல்லவும் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி பீடத்தில் இருந்து குழாய்கள் அமைத்து வள்ளி தேவசேனா மண்டபம் அருகே பக்தர்களுக்கு அபிஷேக பால் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. தவிர கோவிலுக்குள் தற்காலிக மின் விசிறிகள், ஏர்கூலர்கள் வைக்கப்பட்டுள்ளது. நாளைஅதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 6:00 மணிக்கு சுவாமி விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வார். காலை 6:00 மணி முதல் பக்தர்கள் கொண்டு வரும் பால் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் வழக்கமான பாதையிலும், சிறப்பு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் கம்பத்தடி மண்டபம் மண்டபம் வழியாக மூலஸ்தானம் செலவும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.