Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தன் இருக்கும் வரை கவலையில்லை கோடிமுறை கேட்டாலும்... உதவி ...
முதல் பக்கம் » துளிகள்
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
04:06


* முருகப்பெருமானை வழிபட்டால் காமம், குரோதம் உள்ளிட்ட தீய பண்புகள் மறையும். இதனையே அசுரர்களாக (சூரபத்மன், தாரகாசுரன்) சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
* சுப்பிரமண்ய அஷ்டகத்தை செவ்வாய் அன்று  படித்தால் செவ்வாய் தோஷம் விலகும்.
* முருகனுக்கு வலதுபுற கைகளில் கோழிக்கொடி, வச்சிராயுதம், அங்குசம், அம்பு, வேல் ஆகிய ஆயுதங்களும், இடப்புற கைகளில் தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் ஆகிய ஆயுதங்களும் இருக்கும்.
* கந்த புராணத்தில் உள்ள சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் படித்தால் பாவம் பறந்தோடும்.
* முருக வழிபாட்டுக்கு ஏற்ற திதி சஷ்டி, நட்சத்திரம் கார்த்திகை, கிழமை செவ்வாய்.
* முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் ‘காங்கேயன்’ என பெயர் பெற்றார். சரவணப் பொய்கையில் அவதரித்ததால் ‘சரவண பவன்’ எனப்பட்டார். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்றும், பராசக்தியால் ஆறு உருவமும் ஒரே வடிவமாக ஆக்கப்பட்டதால் ‘கந்தன்’ என்றும் பெயர் பெற்றார்.
* ‘முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்’ எனப் பாடியவர் அருணகிரிநாதர்.
* முருகனின் கையில் உள்ள வேலுக்கு ஞானசக்தி என்றும் பெயருண்டு.
* திருஞானசம்பந்தராக பூமியில் அவதரித்தவர் முருகப்பெருமானே என்பர்.  
* தமிழகத்தில் முருகனுக்கு குடவரை கோயில்கள் உள்ள தலங்கள் திருப்பரங்குன்றம், கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான் மலை, சித்தன்னவாசல், வள்ளிக்கோயில், மாமல்லபுரம்.
* மலைக்கோயில்களில் குடிகொண்டுள்ள முருகனை ‘சிலம்பன்’ என்று குறிப்பிடுவர்.
* விசாகன் என்றும் முருகன் அழைக்கப்படுகிறார். இதற்கு ‘மயிலில் சஞ்சரிப்பவன்’ என்பது பொருள்.
* முருகனுக்கு உகந்த பூக்கள் கடம்ப மலர், முல்லை, சாமந்தி, ரோஜா, செங்காந்தள்.
* முருகன் சன்னதியை ஒருமுறை சுற்றி வந்து வணங்கினால் போதும்.
* முருகனுக்காகக் கட்டப்பட்ட முதல் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் ஒற்றைக் கண்ணுாரில் உள்ளது. முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட கோயில் இது.  இங்கு ஒரு கையில் ஜப மாலையும், மறு கையில் சின்முத்திரையும் காட்டியபடி முருகன் இருக்கிறார். வாகனமாக யானை இங்குள்ளது.  
*  ஆதிசங்கரர் உருவாக்கிய ஆறுவகை வழிபாட்டு முறைகளில் முருக வழிபாடு ‘கவுமாரம்’ எனப்படும்.
*  படைப்புக் கடவுளான பிரம்மாவை சிறையில் அடைத்தார் முருகன். இதனால் அவரே அத்தொழிலை மேற்கொண்டார். இதை உணர்த்தும் விதமாக திண்டுக்கல் – மதுரை செல்லும் சாலையில் 10 கி.மீ., துாரத்திலுள்ள சின்னாளப்பட்டி என்னும் ஊரில் நான்கு முகம் கொண்டவராக முருகன் இருக்கிறார்.
* ஆறு தீப்பொறிகளாக அவதரித்த முருகன் கங்கை நதியால் சுமக்கப்பட்டதால் ‘காங்கேயன்’ எனப்பட்டார்.
*  சிவன், பார்வதிக்கு நடுவில் முருகன் இருக்கும் கோலத்தை ‘சோமாஸ்கந்த மூர்த்தி’ என அழைப்பர்.
* முருகப்பெருமானுக்காக சூரபத்மனிடம் துாதுவராகச் சென்றவர் வீரபாகு.
* முருகன் மீது ஸ்கந்தகுரு கவசம் பாடியவர் சாந்தானந்தர்.
* தக்க சமயத்தில் பக்தர்களுக்கு அருள்புரிபவர் என்பதால் முருகனை ‘வேளைக்காரன்’ என்பார்கள்.   
* படைவீடுகளில் மூன்றாவதாக கருதப்படுவது பழநி.
* திருமுருகாற்றுப்படையில் திருச்சீரலைவாய் எனப்படும் தலம் திருச்செந்துார்.
* திருச்செந்துார் முருகன் மீது பாடப்பட்ட திருப்புகழ் பாடல்கள் 83.
* முருக வழிபாட்டு முறைகளை விளக்கும் நுால் குமார தந்திரம்.
* முருகன் மீது கந்தரலங்காரம் பாடியவர் அருணகிரிநாதர்.
* ஆறுபடை வீட்டில் மலை இல்லாத தலம் சுவாமிமலை.
* திருப்புகழில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 1300.
* முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழைப் பாடியவர் குமரகுருபரர்.
* திருத்தணி முருகனுக்கு மார்கழியில் வெந்நீரால் அபிஷேகம் செய்வர்.
* திருச்செந்துாரில் ஜெயந்தி நாதர், குமர விடங்கர் என இரண்டு உற்ஸவர்கள் உள்ளனர்.
* சுவாமிமலையின் புராணப்பெயர் திருவேரகம்.
* கர்நாடக மாநிலத்தில் முருகனை நாக சுப்பிரமணியர் என பாம்பு வடிவில் வழிபடுகின்றனர்.
* அவ்வையாருக்கு நாவல்கனியைத் தந்தவர் முருகன். அந்த தலத்தின் பெயர் சோலைமலை.
* அகத்தியருக்கு முருகன் உபதேசித்த இடம் பொதிகை மலை (திருநெல்வேலி மாவட்டம்)
* ஆறுபடை வீடுகளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மலை சுவாமிமலை. இங்குள்ள படிகளின் எண்ணிக்கை 60.
* முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நிகழ்ந்த தலம் திருப்பரங்குன்றம்
* சுக்கிர தோஷம் போக்குபவராக திருத்தணி முருகன் திகழ்கிறார்.
* கந்த புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலம் காஞ்சிபுரம் குமரகோட்டம்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar