தேவதானம் பேட்டையில் 45 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2022 08:06
செஞ்சி: தேவதானம்பேட்டையில் 45 அடி வீர ஆஞ்சநேயருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சியை அடுத்த தேவதானம் பேட்டையில் புதிதாக 45 அடி உயரத்தில் வீர ஆஞ்சநேயர் சிலை அமைத்துள்ளனர். இதன் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனை முன்னிட்டு 11ம் தேதி கிராம தேவதைகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடும் விக்னேஸ்வர பூஜையும், யாகசாலை பிரவேசமும், முதற்கால யாகசாலை பூஜையும் நடந்தது. 12ஆம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, 1008 விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியன நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு இருந்து புனித நீர் கொண்டு 45 அடி உயர மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.