காளையார்கோவில் : காளையார்கோவில் சோமேஸ்வரர் சமேத சவுந்திரநாயகி கோயில் வைகாசி பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இங்கு ஜூன் 3 ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடந்தது. ஜூன் 11 அன்று சோமேஸ்வரர் சமேத சவுந்திரநாயகி, சவுந்திரநாயகி, விநாயகர், முருகர் தேரோட்டம் நடந்தது. ஜூன் 12 இரவு 7:00 மணிக்கு முக்கிய நிகழ்வாக கோயில் அருகே உள்ள தெப்பத்தில் சுவாமி, அம்பாளுடன் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடந்தது.
அன்று நள்ளிரவு 12:00 மணி வரை தெப்பத்தை மூன்று முறை சுவாமி அம்பாள் உற்சவம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்ப உற்சவத்தை கண்டு தரிசனம் பெற்றனர். அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் பிரமோத்ஸவ விழா நிறைவு பெற்றது. கோயில் ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன் ஏற்பாட்டை செய்தார்.