சுல்தான்பேட்டை: கோவை மாவட்டம் , சூலூர் வட்டம் ஜல்லிப்பட்டி அருகே அமைந்துள்ள முத்துமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நேற்று (13ம் தேதி) திங்கட்கிழமை தொடங்கியது.
காலை 5.00 மணிக்கு மங்கள இசையுடன் விநாயகர் வழிபாட்டுடன் நிகழ்ச்சி தொடங்கியது.பின்பு காலை 6.00 மணிக்கு மேல் பெரிய விநாயகர் , தொட்டிய நாயக்கர் மணிமண்டபம் மற்றும் காலை 9.00 மணிக்கு மஹாபூர்ணாகுதி , தீபாராதனையும் அம்மனுக்கு நடைபெற்றது. காலை 9.00 மணிக்கு மேல் முத்துமாரியம்மன் கோபுர விமான மஹா கும்பாபிஷேகம் மற்றும் காலை 9.30 மணிக்கு மேல் மூலவர் முத்துமாரியம்மன் மஹா கும்பாபிஷேகம் மற்றும் தசதானம் , தசதரிசனம் ஆகியவை நடைபெற்றது.பின்பு மாலை 6.00 மணிக்கு மேல் முத்துமாரியம்மனுக்கு திருக்கல்யாணம் , திருவிளக்கு வழிபாடு மற்றும் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது.இந்த கும்பாபிஷேகத்தில் ஜல்லிப்பட்டியைச் சுற்றியுள்ள பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.