பதிவு செய்த நாள்
06
ஆக
2012
10:08
உங்களின் முக்கிய கடமைகள்
""ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. அதாவது, ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன, என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ""அல்லாஹ்வின் தூதரே! அவையாவை? என கேட்கப்பட்டது. அதற்கு அண்ணலார் அவர்கள், ""நீர் உம் முஸ்லிம் சகோதரரை சந்திக்கும் போது, அவருக்கு ஸலாம் உரைப்பதும், அவர் உம்மை விருந்துக்கு அழைக்கும்போது அவ்வழைப்பை ஏற்றுக் கொள்வதும், அவருக்கு நீர் நலம் நாடிட (அறிவுரை கூறுதல்) வேண்டுமென்று அவர் விரும்பும்போது அவருக்கு நீர் நலம் நாடுவதும், அவருக்கு தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே உரியன) என்று அவர் கூறினால், அதற்கு நீர் பதில் கூறுவதும், அவர் நோயுற்று விட்டால் அவரை நலம் விசாரிப்பதும், அவர் இறந்து விட்டால் அவருடைய ஜனாஸாவுடன் செல்வதும் தான் அவருக்கு உம் மீதுள்ள உரிமைகளாகும். அதாவது, அவருக்கு நீர் ஆற்ற வேண்டிய கடமைகளாகும், என்றார்கள். இந்த ஆறுகடமைகளையும் ஒருவருக்குஒருவர் அனுசரித்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை இந்த நோன்பு காலத்தில் எடுத்துக் கொள்வீர்களா!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31