கமுதி: கமுதி அருகே வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சக்தி விநாயகர், முருகன், கருப்புசாமி உட்பட பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேக பூஜை நடந்தது.இதனை முன்னிட்டு கோயிலில் மகா கணபதி ஹோமம் தொடங்கி யாகசாலை பூஜை, பூர்ணாகுதி உட்பட சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. பின்பு சிவாச்சாரியார் சத்தியேந்திரன் குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்திற்கு கலச நீர் ஊற்றப்பட்டது.அரியநாச்சி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால்,சந்தனம்,இளநீர், மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது. கிராமத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.