காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் தேரோட்டம் நடந்தது.
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசித் திருவிழா கடந்த ஜூன் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், சிம்ம, ஹனுமந்த, கருட, யானை, குதிரை வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தேரோடும் வீதி வழியாக தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஜூன் 17 ஆம் தேதி தெப்பத் திருவிழாவும், ஜூன் 18 ஆம் தேதி புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.