உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மதுார் கிராமம். இக்கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் குரங்குகள் கூட்டமாக வசித்தன. அதில் ஒரு குரங்கு, தெரு முனையில் உள்ள அரச மரத்தடியில் இறந்து கிடந்ததாகவும், அக்குரங்கை அப்பகுதி வாசிகள் அதே இடத்தில் அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. குரங்கை அடக்கம் செய்த இடத்தில், ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் கட்டி கிராம வாசிகள் வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான உற்சவ விழா நேற்று முன்தினம் நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு, மஹா சாந்தி ேஹாமம், சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் தீபாராதணை ஏற்றி, பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.