பள்ளிப்பட்டு: வேணுகோபாலாசுவாமி கோவில் பிரம்மோற்சவத்தில், கருட சேவை நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.பள்ளிப்பட்டு அடுத்த, மேலப்பூடி கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றங்கரையில் உள்ளது வேணுகோபாலசுவாமி கோவில். இந்த கோவிலின் பிரம்மோற்சவம், கடந்த சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா எழுந்தருளி வருகிறார். இந்நிலையில், கருட சேவை உற்சவம் நேற்று நடந்தது.கருட வாகனத்தில் எழுந்தருளிய வேணுகோபால சுவாமி பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை, தேரில் பெருமாள் எழுந்தருளுகிறார்.