மூங்கில்துறைப்பட்டு மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2022 08:06
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டில் மகா காளியம்மன் மற்றும் பரிவர்த்தன சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி, கடந்த 14ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மதியம் 12:00 மணிக்கு சக்தி காளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு கருங்கல் சரட்டு அம்மனின் சக்தி பீடத்திற்கு புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து 15ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், 16ம் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜையும் மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு நான்காம் யாகசாலை பூஜையைத் தொடர்ந்து 11:30 மணிக்கு கடம் புறப்பாடாகி 12:11 மணிக்கு 11 அடி உயர் மகா காளியம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.