பதிவு செய்த நாள்
18
ஜூன்
2022
08:06
ஆரணி: ஆரணியில், பத்மாவதி தாயார் சமேத வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள, ஏ.சி.எஸ் கல்வி குழும வளாகத்தில், புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தன்னுடைய சொந்த செலவில், 80 அடி உயர ராஜகோபுரத்துடன் புதிய பத்மாவதி தாயார் சமேத வெங்கடஜலபதி பெருமாள் கோவில் கட்டியுள்ளார். இக்கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை, முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ேஹாமத்துடன் தொடங்கியது. திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பெரிய ஜீயர்கள் சின்ன ஜீயர்கள் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பட்டாச்சியார்கள் யாகசாலை பூஜை நடத்தப்பட்ட நிலையில், நேற்று காலை பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித புனித நீரை கொண்டு, கருவறை கலசம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மேலும், அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி, தெலுங்கான மாநில கவர்னர் தமிழசை சவுந்தர்ராஜன். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, திரையுலகினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.