பதிவு செய்த நாள்
20
ஜூன்
2022
08:06
ராமநாதபுரம், ராமநாதபுரம் அருகே அத்தியூத்து பகவதியம்மன் கோயிலில், 1008 லலிதா ஸஹஸ்ர நாம வழிபாடு, குங்கும அர்ச்சனை நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். சித்தார்கோட்டை ஊராட்சி அத்தியூத்து கோயில்கரை உள்ள உதிரமுடைய அய்யனார், பகவதியம்மன் கோயிலில் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று ஆனியில் பகவதியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், பழங்கள், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்தனர். வெள்ளிக்கவசம் அணிவித்து, மலர் அலங்காரத்தில் 1008 லலிதா ஸஹஸ்ர நாமத்துடன் குங்கும அர்ச்சனை செய்து தீபாராதனை நடந்தது.மாங்கல்ய பூஜை செய்து, நெய்விளக்கு ஏற்றி, மாவிளக்கு எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.