ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள் நீராட முடியாமல் திணறல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2022 08:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்ததால், புனித நீராட முடியாமல் திணறினார்கள்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அதிலும் சனி, ஞாயிறில் நீராடவும், தரிசிக்கவும் 1.50 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். அதன்படி நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராட கோயில் வடக்கு ரத வீதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் 5 நிமிடத்திற்கு ஒருமுறை பக்தர்களை நிறுத்தி வைத்து கோயிலுக்குள் அனுப்பினார்கள். இக்கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் கோயில் ஊழியர்கள் திணறினார்கள். மேலும் கோயில் முதல் பிரகாரத்தில் உள்ள சுவாமி, அம்மன் சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் குழந்தைகள், வயது மூத்த பக்தர்கள் நிம்மதி இன்றி தரிசித்தும், சிலர் வெளியில் நின்றபடி தரிசித்து சென்றனர்.