பதிவு செய்த நாள்
27
ஜூன்
2022
02:06
புதுச்சேரி : கருவடிக்குப்பம், சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி, நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் பிரசித்திப் பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று, தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனையொட்டி, சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரதோஷ பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்தி பகவானை, பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், தேவசேனாதிபதி குருக்கள் செய்திருந்தனர்.