விநாயகரின் திருவடியை பூக்களால் வழிபடுவோருக்கு வாக்கு வன்மை, நல்ல மனம், லட்சுமி கடாட்சம், உடல்நலம் ஏற்படும் என்பது இதன் பொருள். இதற்கு வேறொரு பொருளும் உண்டு.
துளசி, குப்பைமேனி, தும்பை, கரிசலாங்கண்ணி ஆகிய மூலிகைகளை வேருடன் இடித்து சாறு பிழிந்து பனை வெல்லம், தேனுடன் கலந்து சாப்பிட்டால் நோய் அணுகாது. நீண்ட காலம் வாழலாம். துப்பு – தேன் திரு – துளசி மேனி – குப்பை மேனி தும்பி – தும்பை கையான் – கரிசாலை (கரிசாலைகண்ணி) பாதம் – மூலம் (வேர்)