வைகை ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு : சூடம் ஏற்றி வழிபட்ட மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2022 06:06
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் வைகை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலையை பொது மக்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர். வைகை ஆற்றில் சில மாதங்களாக நீர்வரத்து இருந்த நிலையில் தற்போது தண்ணீர வற்ற தொடங்கியுள்ளது. இன்று லாடனேந்தலை சேர்ந்த சிலர் மாரநாடு கால்வாயில் குளிக்க சென்ற போது மூன்று அடி உயரம் கொண்ட அம்மன் சிலையை கண்டெடுத்து அப்பகுதி மக்களுடன் சூடம் ஏற்றி வழிபட்டனர். தகவலறிந்து வருவாய்துறையினர் சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர்.