கோயிலில் பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2022 12:06
பழநி: பழநி மலைக்கோயிலில் பக்தர்களை கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர கோயில் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. பழநி மலைக்கோயிலில் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த கொரோனா பரவல் ஏற்பட்ட சூழலில் கோயில் நிர்வாகம் பக்தர்களை சமூக விலகல், முகக்கவசம் அணிந்து வருதல் போன்றவற்றை கடைபிடிக்க வலியுறுத்தியது. கொரோனா பரவல் மற்றும் அதன் தாக்கம் குறைந்த பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன் பின் பக்தர்கள் முக கவசம் அணிந்து வரும் இயல்பையும் மாற்றிக்கொண்டனர்.
தற்போது மீண்டும் தமிழக அரசு முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. அதனை தொடர்ந்து மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கவசம் அணிந்து வர வலியுறுத்தப்படுகிறது. முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் துணியாலான முகக்கவசம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் மலைக்கோயிலிலும் மற்றும் பொது இடங்களிலும் முகக் கவசத்தை அணிந்து நோய்த்தொற்றில் இருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.