ஆனைமலையில் அரச, வேப்ப மரங்களுக்கு இறைத்திருமண விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2022 01:06
பொள்ளாச்சி: ஆனைமலையில், வரசித்தி விநாயகர் கோவிலில் இறைத்திருமண விழா நடந்தது.ஆனைமலையில், வரசித்தி விநாயகர் கோவிலில், இல்லந்தோறும் இன்புற வேண்டி இறைத்திருமண விழா நடந்தது. சிவ பெருமான் வடிவில் அரசமரம், பார்வதி தேவி வடிவில் வேம்பு மரத்துக்கும் திருக்கல்யாணம் நடந்தது.விழாவையொட்டி, காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், வாஸ்து சாந்தி, பிரதோஷம் மற்றும் கிருத்திகை வழிபாடு நடந்தது.தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு அரச மரம் மற்றும் வேம்பு மரத்துக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்னிசை நிகழ்ச்சியும், உச்சி கால பூஜையும் நடைபெற்றன. அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.