திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆனித்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2022 01:06
திண்டுக்கல் : திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது.கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி கோயில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. செயல் அலுவலர் அண்ணாதுரை, முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி ரதவீதி வழியாக நகர் வலம் வந்தார். விழாவில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும். ஜூலை 7 தெப்ப உற்ஸவம், ஜூலை 8 ல் ஊஞ்சல் உற்ஸவம் நடக்க உள்ளது.