பதிவு செய்த நாள்
28
ஜூன்
2022
10:06
மேட்டுப்பாளையம்: அமாவாசையை முன்னிட்டு, வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அம்மனை வழிபட்டனர்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. ஒவ்வொரு வாரம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வர். விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். இன்று அமாவாசையை முன்னிட்டு, கோவிலுக்கு, அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு, 5:00 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு விடப்பட்டது. பக்தர்கள் பவானி ஆற்றில் குளித்து, நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கைலாச மூர்த்தி, பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.