பதிவு செய்த நாள்
10
ஆக
2012
10:08
திண்டுக்கல்: ஆடி சுக்ல வார விழா திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 30 ல் துவங்கிய விழா இன்றுடன்(ஆக.10) நிறைவு பெறுகிறது. அம்பாள் தீர்த்தம் எடுத்தல், சிவபூஜை செய்தல், கோலாட்டம் ஆடுதல், பிட்டுக்கு மண் சுமத்தல், வளையல் விற்றல், குதிரை சேவகனாக வருதல், கருங்குருவிக்கு உபதேசம் செய்தல், மாணிக்க வாசகருக்கு உபதேசம் செய்தல், எல்லாம் வல்ல சித்தராக வந்து கல் யானைக்கு கரும்பு வழங்குதல், பட்டாபிஷேகம் செய்தல், சயன அலங்காரம், பூ பல்லக்கு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. ஆடி கடைசி வெள்ளியான இன்று அம்மன் பூப்பல்லக்கில் காட்சியளிக்கிறார். பூச்சொறிதல் நிகழ்ச்சி இன்று காலை 8.30 மணியிலிருந்து 12.30 மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையிலும் நடைபெறும். பூப்பல்லக்கில் அமர்ந்திருக்கும் அம்மன், நான்கு ரத வீதிகளிலும் உலா வருவார்.