வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையே பொறுமை. நிறைவாக வாழ்வதற்கு இது மிகவும் அவசியம். அப்போதுதான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்வோம். ‘நேரமும் பொறுமையுமே போராளிகளின் பலம்’ என்கிறார் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். எத்தனை திறமை இருந்தாலும், அதை வெற்றியாக மாற்றும் சக்தி பொறுமைக்கு உண்டு. சொல்லப்போனால் இது அனுபவத்தின் வெளிப்பாடு.