* தன்னையே பிறரிடம் கொடுப்பது அன்பின் வெளிப்பாடு. * உடல் அழகு ஒரு மாயை. ஆனால் நல்ல பண்பு நீண்ட காலம் இருக்கும். * தன் உதடுகளை அடக்குபவனே புத்திமான். * பிறரது பிரச்னையை தீர்த்தால், உங்களது பிரச்னை தானாக சரியாகும். * பொறுமையாக இருங்கள். எல்லாம் உங்கள் வசமாகும். * நேர்மையானவர் தான் செய்த தவறுக்கு வருந்தி அதை விட்டுவிடுவார். * ஞானம் விலை மதிப்புள்ளது. அதைப்பெற அதிக நேரம் செலவிடுங்கள். – பொன்மொழிகள்