திருப்புவனம்: திருப்புவனம் அருகே கொந்தகையில் மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் உருண்டு கொடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். மந்தையம்மன் கோயிலில் வருடம்தோறும் நடைபெறும் ஆனி திருவிழா கொரானோ பரவலால் நடைபெறாத நிலையில் இந்தாண்டு கடந்த 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு அய்யனார் கோயிலில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக கிராமமக்கள் வந்தனர். பின் நேர்த்திகடன் விரதமிருந்த பக்தர்கள் கோயில் முன் ஈர துணியுடன் 100 அடி தூரத்திற்கு உருண்டு வந்தும் மாவிலக்கு ஏற்றியும் வழிபட்டனர்.