சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இன்று காலை 6 மணியளவில் கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. ருத்ர ஹோமம், கலச புறப்பாட்டிற்கு பின்பு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர், மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.