ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் செப்பு தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2022 08:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி உற்சவத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 7:50 மணிக்கு கோயிலில் இருந்து செப்பு தேருக்கு பெரியாழ்வார் எழுந்தருளினார். அங்கு ஹரிஷ் பட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தினார். பின்னர் கோவிந்தா, கோபாலா கோசத்திற்கு மத்தியில் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோயில் யானை முன் செல்ல, தேர் ரத வீதி சுற்றி வந்து ஒரு மணி நேரத்தில் நிலையம் அடைந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகர் ரமேஷ், மணியம் ஸ்ரீராமன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடத்திற்கு பிறகு நேற்று வழக்கம் போல் செப்பு தேரோட்டம் நடந்தது, பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.