அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2022 08:07
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் துவங்கிய ஆனி பிரமோற்சவ (தட்சிணாயன புண்ணிய காலம்) விழாவில், தங்க கொடிமரத்தின் முன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளம் முழங்க, இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டுக்கான ஆனி பிரமோற்சவ (தட்சிணாயன புண்ணிய காலம்) திருவிழாவில், தங்க கொடிமரத்தின் முன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளம் முழங்க, இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தங்க கொடிமரத்தின் முன் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், மற்றும் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பத்கர்கள் தரிசனம் செய்தனர்.