சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாடு : கூடுதல் நாட்கள் அனுமதிக்க எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2022 08:07
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, கூடுதல் நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு வருடம் தோறும் ஆடி அமாவாசை வழிபாட்டில் சுவாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்க ப்படவில்லை. தற்போது பிரதோஷம் முதல் நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு ஜூலை 28 அன்று நடக்கும் ஆடி அமாவாசை வழிபாட்டில் பங்கேற்க மிகவும் அதிக அளவில் பக்தர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஜூலை 24 முதல் 31ஆம் தேதி முடிய ஒரு வாரத்திற்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்றும், இதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், திருவிழாவிற்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இதுவரை விருதுநகர், மதுரை மாவட்ட அரசு நிர்வாகம் தரப்பில் வழக்கமாக மேற்கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. திருவிழா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என்பது சதுரகிரி பக்தர்களை வருத்தமடைய செய்துள்ளது.