அவிநாசி: மாகாளியம்மன் கோவில் ஒன்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது. அவிநாசி அடுத்த துலுக்கமுத்தூரில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று ஊர் மக்கள் அருகிலுள்ள விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்துச் சென்று வேண்டுதல் நிறைவேற்றினர். அதன் பின்னர் கணபதி ஹோமமும் நடைபெற்றது. மேலும், சிறப்பு அபிஷேகமும். அலங்கார பூஜையும் நடைபெற்று பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார்.