கொட்டாம்பட்டி:வீரசூடாமணிபட்டி வடக்குவா செல்லியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா நடந்தது. வீர சூடாமணிபட்டி, சுந்தர்ராஜன்பட்டி, கச்சிராயன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.