சாயல்குடி காமாட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2022 05:07
சாயல்குடி: சாயல்குடி விஸ்வகர்மா உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காமாட்சியம்மன் கோயிலில் ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. கடந்த ஜூலை 3 அன்று காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. இன்று மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில் 504 விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் வருஷாபிஷேகம் நடக்கிறது. மாலையில் காமாட்சி அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், பூத்தட்டு ஊர்வலம் நடக்கிறது. ஜூலை 11 திங்கட்கிழமையுடன் கூட்டுப் பொங்கலிடுதலுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் சக்திவேல், துணைத்தலைவர் சுடலைமுத்து, செயலாளர் ராம்குமார், பொருளாளர் சேகர் மற்றும் சாயல்குடி விஸ்வகர்மா உறவின்முறையினர் செய்திருந்தனர்.