சிவகங்கை : சிவகங்கையில் பிரசித்தி பெற்ற பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கையில் ஆண்டு தோறும் 10 நாட்கள் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படும். இங்குள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயில் மட்டுமின்றி நகரிலுள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் காப்பு கட்டி விழா நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டாக திருவிழா நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு விமரிசையாக நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் நேற்று (ஜூலை 8) காலை 9:15 முதல் 10:15க்குள் கொடியேற்றம், காப்பு கட்டுடன் தொடங்கியது. தினமும் மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். ஜூலை 15 அன்று காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு பாலபிேஷகமும், மாலை 4:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். அன்று இரவு நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் பூத்தட்டுக்களை ஊர்வலமாகஎடுத்து வந்து அம்மனுக்குபூச்சொரிதல் விழா நடத்துவர். விழா ஏற்பாடுகளை அறநிலைய செயல் அலுவலர் கணபதிமுருகன் தலைமையில் செய்து வருகின்றனர்.