விக்ஞானகிரி மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2022 07:07
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள விக்ஞான கிரி மலை மீது வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று வெள்ளிக்கிழமை காலை ஆகம விதிப்படி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வேத பண்டிதர்கள் நடத்தினர்.
சிவன் கோயில் பிரதான அர்ச்சகரான சுவாமிநாதன் குருக்கள் தலைமையில் வேத பண்டிதர்கள் கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகள் செய்து வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை யாகசாலை ,கலச பூஜைகள், ஹோமோ பூஜைகளை ஆகமவிதிப்படி நடத்தினர் .இதனைத் தொடர்ந்து கலசங்களை ஏற்பாடு செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.அதில் பிரதான கலசத்தில் உள்ள புனித ஜலத்தை கோயிலைச் சுற்றி ஊர்வலமாக மேளதாளங்களுடன் கோயில் சிகரத்திற்கு கொண்டு சென்றனர் . அங்கு சிகர கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் நடத்தினர் .பக்தர்கள் "அரோகரா அரோகரா "என்று சுப்ரமணியசுவாமி நாம ஸ்வரணங்கள் செய்தனர் .இதனைத் தொடர்ந்து கோயில் மூலவர் சன்னதியில் சுப்பிரமணிய சாமி மூலவருக்கு சிறப்பு புனித ஜலத்தினால் சிறப்பு அபிஷேகங்களை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து மகா தீபாராதனை சமர்ப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி நீதிமன்ற சிவில் ஜட்ஜ் சீனிவாச ராவ், காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ,கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.