ராமநாதபுரம் : ராமநாதபுரம் கோதண்ட ராமர் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ விழாவில் நகரின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது.
ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பழமைவாய்ந்த கோதண்டராமர் கோயிலில் ஜூன் 29ல் ஆனி பிரம்மோற்ஸவ விழா தொடங்கியது. தினமும் ராமர், சீதா, லட்சுமணன் உடன் தோளுக்கினியாள், சிம்மம், ஆஞ்சநேயர், கருடன் ஆகிய வாகனங்களில் இரவு உலா வந்தார். ஜூலை 5 ல் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமர், சீதா, லட்சுமணின் தேரேற்றம்செய்யப்பட்டனர். கோயில்வெளிப்பிரகாரம் தொடங்கி நகர முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது. அப்போது பக்தர்கள் தேங்காய், பழங்கள் வைத்து வழிபட்டனர்.