போத்தனுார்: சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா, ஆறு ஆண்டுகளுக்கு பின் இவ்வாண்டு நடக்கிறது. கடந்த, 28ல் அம்மன் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. 5ம் தேதி கம்பம் நடப்பட்டது. தினமும் கம்பம் சுற்றி ஆடுதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்விக்கப்படுகிறது. நேற்று, மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நாளை, அம்மன் திருவீதி உலா வருதல், நாளை மறுநாள் அம்மன் கண் திறப்பு, பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு வழிபாடு ஆகியவை நடக்கின்றன. வரும் 14ல், முக்கிய நிகழ்வாக, அம்மன் எழுந்தருளிய தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான, 15ல் முளைப்பாரி எடுத்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை ஊர்ப் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.