சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.கீரந்தை கிராமத்தில் உள்ள பூங்குழலி அம்மன் கோயிலில் கடந்த மே 25 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. 48 வது நாள் நிறைவடைந்ததை முன்னிட்டு மண்டல பூஜை விழாவில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், யாக வேள்விகள் நடந்தது. பூஜிக்கப்பட்ட கும்பத்தில் இருந்து புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை எஸ்.கீரந்தை கிராம பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.