கொடைரோடு: பொட்டிசெட்டிபட்டி காந்தி நகரில் ரணகாளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அம்மன் பூங்கரகம் ஜோடித்து மேளதாளம் வானம் வேடிக்கையுடன் வீதி உலா வந்து கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அம்மனுக்கு அபிஷேகங்கள் ஆராதனை நடந்தது. பெண்கள் அம்மன், கருப்பணசாமி, காவடி வடிவில் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து கும்மி அடித்து வழிபட்டனர். மாவிளக்கு பூஜை, தீச்சட்டி, பால்குடம் எடுத்தல் என இரவோடு இரவாக ஒரே இரவில் அனைத்து நேர்த்திகடன் நடத்தி முடிக்கப்பட்டு அதிகாலை அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.